×

சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பயணிகள் வரவேற்பை பெறாத சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. மேலும், பயணிகள் அதிகம் உபயோகிக்கும் ரயில்களின் வழித்தடத்தில் கூடுதல் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் பயணிகளின் வரவேற்பை பெறாத ரயில்களை ரயில்வே ரத்து செய்து வருகிறது.

அந்த வகையில், சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் சதாப்தி (06027, 06028) சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கடைசி சேவையாக வரும் 30ம் தேதி இயக்கப்படும். மேலும் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் (02027, 02028) சிறப்பு ரயில் வரும் 21ம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.
இந்த ரயில் கடைசி சேவையாக நவம்பர் 20ம் தேதி (நாளை) இயக்கப்படும்.



Tags : Cancellation ,Southern Railway , Cancellation of special trains: Southern Railway notice
× RELATED பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை –...