×

ஏ.கே.அந்தோணிக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணி மற்றும் அவரது மனைவிக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அந்தோணியின் மகன் அனில் கே.அந்தோணி தெரிவித்துள்ளார். அவர், நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘எனது தந்தை ஏ.கே.அந்தோணி மற்றும் தாய் எலிசபெத் அந்தோணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது,’ என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியின் சிறப்புக்குழு கூட்டத்தில் ஏ.கே.அந்தோணி பங்கேற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Corona ,A.K. ,Anthony , Corona to A.K. Anthony
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...