×

அரசு பிரிவு துறையில் பணியாற்றும் ஊதியம் மாற்றி அமைப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை:
தமிழக அரசின் பல்வேறு துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய முன்னாள் உயர் நீதிமன்ற முருகேசன் தலைமையில், ஊதிய குறைதீர்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த செப்டம்பரில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அதன்படி, அனைத்து அரசு துறைகளில் ஊதிய முரண்பாடுகளை திருத்தி அமைத்து அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், பொதுப்பணி துறை உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதே நேரம் சில அரசு துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, வருவாய் உள்ளிட்ட பல துறைகளில் இந்த ஊதிய விகிதம் திருத்தி அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Works in the government sector Pay converter system
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...