சென்னை வடக்கு, மேற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்டங்கள் பிரிப்பு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை வடக்கு-வடகிழக்கு, சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை வடக்கு மாவட்டம், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு - சென்னை வடகிழக்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம், திருவொற்றியூர், சென்னை வடக்கு மாவட்டம், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், ராயபுரம்.நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற சென்னை வடக்கு -சென்னை வடகிழக்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சென்னை வடகிழக்கு மாவட்டம் பொறுப்பாளர்  மாதவரம் எஸ்.சுதர்சனம், 197/261, பஜார் தெரு, மாதவரம், சென்னை - 600 060. சென்னை வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் இளையஅருணா, 1, வீராசாமி தெரு, ராயபுரம், சென்னை - 600 013.

சென்னை மேற்கு மாவட்டம், நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணா நகர்.இதுபோல, கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற சென்னை மேற்கு - சென்னை தென்மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.சென்னை மேற்கு மாவட்டம் பொறுப்பாளர் நே.சிற்றரசு, 118/60, முத்தையா தெரு, வெள்ளாள தேனாம்பேட்டை, சென்னை - 86. சென்னை தென்மேற்கு மாவட்டம் பொறுப்பாளர் மயிலை த.வேலு 12, வி.சி. கார்டன் முதல் தெரு, மந்தைவெளி, சென்னை -28.

தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட ஆகிய மாவட்டங்கள், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், தஞ்சை வடக்கு - தஞ்சை மத்திய - தஞ்சை தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. தஞ்சை வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம்.தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர், தஞ்சை தெற்கு மாவட்டம். பட்டுக்கோட்டை, பேராவூரணி  தஞ்சை வடக்கு - தஞ்சை மத்திய - தஞ்சை தெற்கு என பிரிக்கப்படுகிறது.

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற தஞ்சை வடக்கு - தஞ்சை மத்திய - தஞ்சை தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

தஞ்சை வடக்கு மாவட்டம் பொறுப்பாளர் சு.கல்யாணசுந்தரம், பம்பப்படையூர் அஞ்சல், பட்டீஸ்வரம் வழி, கும்பகோணம் வட்டம், தஞ்சை - 612 703. தஞ்சை மத்திய மாவட்டம் பொறுப்பாளர் - துரை. சந்திரசேகரன் கிருத்துவ வெள்ளாளத் தெரு, கண்டியூர், திருவையாறு வட்டம், தஞ்சை - 613 202. தஞ்சை தெற்கு மாவட்டம் பொறுப்பாளர் - ஏனாதி ப.பாலசுப்பிரமணியம் ஏனாதி & அஞ்சல், தஞ்சை - 614 615.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>