×

ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் நடாலை வீழ்த்தினார் தீம்: அரை இறுதிக்கு முன்னேற்றம்

லண்டன்: இங்கிலாந்தில் நடைபெறும் நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடரின் லீக் சுற்று  போட்டி ஒன்றில் 20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ரபேல் நாடலை 2-0 என்ற நேர் செட்களில் வீழ்த்திய டொமினிக் தீம்  அரை இறுதிக்கு முன்னேறினார்.லண்டன் 2020 பிரிவில் நடந்த இப்போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் நடால் (2வது ரேங்க்),  ஆஸ்திரியாவின் டொமினிக் தீமுடன் (3வது ரேங்க்) மோதினார். இருவரும் வெற்றிக்கு மல்லுக்கட்ட இரண்டு பக்கமும் புள்ளிகள் குவிந்தன. அதனால் முதல் செட், மட்டுமின்றி 2வது செட்டும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீண்டது. இருவரும் சம பலத்துடன் மோதினாலும், கொஞ்சம் கூடுதல் வேகம் காட்டிய தீம்  7-6 (9-7), 7-6 (7-4) என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினா–்ர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 25 நிமிடங்கள் நீடித்தது.

கடுமையாகப் போராடி தோற்ற நடால், ‘தீம் சமமான திறன் கொண்டவர். நாங்கள் இருவரும் மிக உயர்தர ஆட்டத்தை விளையாடினோம். சில முக்கிய தருணங்களில் அவர் கொஞ்சம் சிறப்பாக விளையாடியதால் வெற்றிக்குத் தகுதியானவர்’ என்று கூறினார். தீம் பேசும்போது, ‘கடைசி புள்ளி வரை இது சிறந்த ஆட்டமாக இருந்தது. அதிலும் முதல் செட்டை கைப்பற்றிய நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் வாழ்க்கையில் சிறந்த ஆட்டம் இது’ என்று தெரிவித்தார்.இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸ் (6வது ரேங்க்), ரஷ்ய வீரர் ஆந்த்ரே ருப்லேவ் (8வது ரேங்க்) மோதினர். அதில் முதல் செட்டை  6-1 என்ற கணக்கில் சிட்சிபாசும், 2வது செட்டை ருப்லேவ் 6-4 என்ற கணக்கிலும் வென்றனர். டை பிரேக்கர் வரை நீண்ட 3வது செட்டை சிட்சிபாஸ்   7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இப்போட்டி ஒரு மணி, 55 நிமிடத்துக்கு நடந்தது.தொடர்ச்சியாக 2 தோல்விகளுடன் ருப்லேவ் வெளியேறிய நிலையில், நடால் - சிட்சிபாஸ் இடையே நடக்கும் கடைசி லீக் ஆட்டம் இருவரில் யாருக்கு அரையிறுதி வாய்ப்பு என்பதை உறுதி செய்யும்.  



Tags : ATP Finals Tennis Natalie Dropped Theme: Semi-Final Progress
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...