×

வி.பி.எப் கட்டண பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!! மார்ச் மாதம் இறுதிவரை சிக்கலின்றி திரைப்படங்கள் வெளியாகும்; பாரதிராஜா அறிவிப்பு

சென்னை: அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதிவரை சிக்கலின்றி திரைப்படங்கள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நவம்பர் வரை வி.பி.எஃப் கட்டணமின்றி திரைப்படங்கள் வெளியிடலாம் என்றிருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மார்ச் மாதத்திற்கு பின் எந்த கட்டண அடிப்படையில் படம் வெளியிடுவது என்பது பற்றி அடுத்தகட்ட பேச்சில் முடிவு எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.

இந்நிலையில்  சுமார் 7 மாதங்களுக்கு பிறகு 10-ந்தேதி தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அத்துடன் கொரோனா நெறிமுறைகளுடன்  50 இருக்கைகளுடன் இயக்கவும் உத்தரவிட்டது.  இது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி  இருந்தாலும், புதியப்படங்கள் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, திரைப்படத் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால்,  வி.பி.எப். கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஏற்க மறுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர், “அரசு உத்தரவுப்படி தியேட்டர்கள் திறக்கப்படும்.

தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்” என்றனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எதுவும் சரியாக அமையவில்லை. பின்னர் கியூப் நிறுவனம் நவம்பர் 2 வாரங்களுக்கு வெளியாகும் திரைப்படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் 100% தள்ளுபடி என அறிவித்தது. அதன் பின்னர் அந்த 2 வாரங்களுக்கு மட்டும் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என பாரதிராஜா அறிவித்தார். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் வரை வி.பி.எஃப் கட்டணமின்றி திரைப்படங்கள் வெளியிடலாம் என்றிருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் உடனான முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்தாண்டு மார்ச் மாதம் இறுதிவரை சிக்கலின்றி திரைப்படங்கள் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு பின் எந்த கட்டண அடிப்படையில் படம் வெளியிடுவது என்பது பற்றி அடுத்தகட்ட பேச்சில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : negotiations ,announcement ,Bharatiraja , Agreement in VPF fee negotiations .. !! The films will be released without a hitch by the end of March; Bharatiraja's announcement
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...