சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் இருந்து மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லிக்கு நவ.24-ம் தேதியில் இருந்து தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் டெல்லியில் இருந்து சென்னைக்கு நவ.26-ம் தேதியில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்டுகின்றன. கன்னியாகுமரியில் இருந்து டெல்லி ஹசரத் நிஜாமுதீனுக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுமார்க்கத்தில் நவ.28 முதல் டெல்லி ஹசரத் நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகின்றன.

Related Stories:

>