போர்டு வைத்தவங்களே குப்பையை போடுறாங்க..!! பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில்தான் இந்த கொடுமை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றியம், பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவத்தூர் சாலையில் உள்ளது கொள்ளம்புதூர் பகுதி பெரிய கண்மாய். இதனை தன்னார்வலர்கள் சமீபத்தில் தூர்வாரி, கரையோரம் முழுவதும் மரங்களை நட்டனர். இக்கண்மாயை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளது. அதனால் ‘குளத்தை சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ளன, அதனால் பாசன கண்மாயில் யாரும் குப்பை கொட்ட கூடா’ என ஊராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் போர்டு வைத்த ஊராட்சி நிர்வாகமே அப்பகுதி குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இக்கண்மாயில் கொட்டுகின்றனர். இதனால் மழைநீர் கண்மாய்க்கு செல்லாமல் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டாமல் கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>