×

2 வருடமாக சிறை வாசம்.. மரணப்படுக்கையில் இருக்கும் கவிஞர் வரவர ராவை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்திடுக : மும்பை ஐகோர்ட்

மும்பை: பீமா-கொரேகான் வன்முறை வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள கவிஞரும்-சமூக ஆர்வலருமான வரவர ராவை நானாவதி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரவர ராவ், 2018ம் ஆண்டு, ஜனவரியில் மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இந்த சட்டத்தின்கீழ், பல ஆண்டுகளாக விசாரணையின்றி கைது செய்து வைக்க முடியும். வரவர ராவ் விசாரணையும், 2 வருடங்களாக நடைபெறவேயில்லை. உடல்நலக்குறைவு கொண்ட ஒரு சீனியர் சிட்டிசனை தொடர்ந்து சிறையில் அடைப்பது, வாழ்க்கை உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுவதாகும் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் மும்பை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரவர ராவ் உடல்நிலை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய் சிங் தாக்கல் செய்த மனுவில், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். காணொளி மூலம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதனை கேட்ட நீதிபதிகள், உடனடியாக வரவர ராவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.  வரவர ராவின் உடலை முழுமையாகப் பரிசோதிக்கவும் மருத்துவமனையில் 15 நாட்கள் சிகிச்சை தரவும் ஆணையிட்டுள்ளது. கவிஞர் வரவர ராவை நீதிமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மருத்துவமனையிலிருந்து சிறைக்கு மாற்றக்கூடாது என்றும் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Varavara Rao ,hospital ,Mumbai iCourt , Poet Varavara Rao, Hospital, Mumbai iCourt
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...