×

தொடர் மழை காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்வு

உடுமலை: தொடர் மழை காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. உடுமலை சுற்று வட்டார பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 67.39 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் 68.08  அடியாக உயர்ந்தது.
இதேபோல, பிஏபி தொகுப்பு அணைகளிலும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையில் பெய்துவரும் மழையின் காரணமாக சோலையாறு அணையில் இருந்து 778 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் 160-க்கு 154 அடியாக உள்ளது. நீர்வரத்து 358 கன அடியாக உள்ளது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் நீர்மட்டம் 69.68 அடியாக உள்ளது. நீர்வரத்து 750 கன அடியாகவும், வெளியேற்றம் 907 கன அடியாகவும் உள்ளது. 120 அடி உயரம் கொண்ட அழியாறு அணைக்கு 321 கன அடி நீர் வருகிறது. நீர்மட்டம் 114.80 அடியாக உள்ளது. 395 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. பரம்பிக்குளத்தில் இருந்து திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், நேற்று அணையின் நீர்மட்டம் 43.37 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

Tags : Amravati ,Thirumurthy Dam , Amravati, Thirumurthy Dam water level rises due to continuous rains
× RELATED பெரியகுளம் செக்டேம் அருகே தரைப்பகுதி சேதமடையும் அபாயம்