×

ஒடிசாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் :முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!

புபனேஸ்வர் : ஒடிசாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடத்தி வருகிறது. ஒடிசா மாநில வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்களையும் அறிவிப்புகளையும் அம்மாநில முதல்வர் தொடர்ந்து அறிவித்த வண்ணம் உள்ளார். இந்த நிலையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனைவருக்கும் இலவச செல்போன்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

ஒடிசாவின் மல்கங்காகிரி மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. இப்பகுதியில் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தை அழிக்கவும்,  மாநிலத்தின் வளர்ச்சி மிகுந்த பகுதிகளில் ஒன்றாக மாற்றவும்  முதல்வர் நவீன் பட்நாயக் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.அதன்படி,  மலங்காகிரி மாவட்டத்தில் உள்ள 52 வருவாய் கிராமங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை முதல்வர் நவீன் பட்நாயக்  காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதியில் வாழும் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக செல்போன் வழங்கப்படும். இந்த பகுதியில் ஏற்கனவே 4 செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 இடங்களில் 4ஜி செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படும். இப்பகுதியில் உள்ள இடதுசாரி தீவிரவாதிகள் வன்முறையை கைவிட்டு விட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கான முயற்சிகளை மக்களுடன் இணைந்து நிறைவேற்ற முன்வரவேண்டும்’ என்று தெரிவித்தார்.

Tags : Naveen Patnaik ,areas ,announcement ,Odisha , Odisha, Naxalites, Dominance: Chief Minister, Naveen Patnaik, Announcement
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...