×

பீகாரை தொடர்ந்து மேற்கு வங்க அரியாசனத்தை கைப்பற்ற அதிரடி வியூகம் அமைக்கும் பா.ஜ.க

கொல்கத்தா: பீகார் சட்டசபை தேர்தலில் கடும் போட்டிக்கிடையே பா.ஜ.க கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதேபோல் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்காளத்திலும் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்பு மம்தாவின் திரிணாமூல் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சியும் செல்வாக்கு பெற்று இருந்தன. மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டு கட்சியின் செல்வாக்கை முறியடித்து விட்டு மம்தா ஆட்சியை மேடையை அலங்கரித்தார்.

இதற்கிடையே அந்த மாநிலத்தில் பா.ஜ.க செல்வாக்கு பெற தொடங்கியது. இந்நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அந்த கட்சி அதிகமான இடங்களை கைப்பற்றியது அதனை உறுதிபடுத்தியது. எனவே மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பா.ஜ.க 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. இரு கட்சிகளுக்கும் இடையே 4 இடங்கள்தான் வித்தியாசம் இருந்தன. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் இன்னும் அதிகமாக உழைத்தால் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று பா.ஜ.க கருதுகிறது. இதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

தற்போது 11 பேர் கொண்ட மேலிடக் குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவில் கட்சியின் பொது செயலாளர் விஜய் வர்கியா, துஷ்யந்த் கவுதம், செயலாளர்கள் சுனில் தியோதர், வினோத் தவாடே, வினோத் சோங்கர், ஹர்திஸ் திவேதி, அரவிந்த் மேனன், ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா, மாநில தலைவர்கள் அமித் சக்ரவர்த்தி, கிஷோர் வர்மன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர் மற்றும் இவர்கள் அனைவரும் தற்போது மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எனவே மேற்குவங்காள மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. அவற்றை 5 மண்டலங்களாக பிரித்திருக்கிறார்கள் மற்றும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மேலிட தலைவர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக கைலாஷ் விஜய் வர்கியா செயல்படுகிறார். அமித் மாளவியா, சுனில் தியோதர், அரவிந்த் மேனன், வினோத் தவாடே ஆகியோர் மாநிலத்தின் நிலைமைகளை ஆய்வு மேற்கொண்டு அதற்கேற்றபடி சரியான முடிவுகளை எடுப்பார்கள். இந்த குழுவினர் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோருடன் நேரடி தொடர்பில் இருந்து அவர்களின் உத்தரவுக்கு இணங்க செயல்பட்டு வருவார்கள் என தெரிவிக்கப்படுகின்றனர்.

எல்லா மாநிலத்தையும் போல மேற்கு வங்காளத்திலும் பா.ஜ.கவின் கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. குறிப்பாக மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களும் ஏற்கனவே பா.ஜ.கவில் இருப்பவர்களும் தனித் தனி அணிகளாக செயல்பட்டு வருவதால் அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தேர்தல் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலை அங்கு நிலவுகிறது, பிரசாரங்கள் எப்படி மேற்கொள்ள வேண்டும், போன்றவற்றை ஆய்வு செய்து மேலிடத்திற்கு அனுப்பி அதன் அடிப்படையில் பிரசார யுக்திகள் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Tags : BJP ,West Bengal ,Bihar , The BJP is plotting to seize the West Bengal throne following Bihar
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி