×

அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 4 மாகாணங்களில் வினியோகிக்க திட்டம்

வாஷிங்டன்: உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பாதிப்பின் தாகத்திற்கு ஆளான நாடாக அமெரிக்கா இன்றளவும் தொடர்கிறது. தடுப்பூசி வருவது எப்போது என்பதுதான் அங்கு மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னணி மருந்து நிறுவனமான பைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில் வழங்கி வினியோகிப்பதற்கான மாதிரி திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. ரோட் தீவு, டெக்சாஸ், நியு மெக்சிகோ, டென்னிசி ஆகியவைதான் அந்த 4 மாகாணங்கள் ஆகும்.

இதையொட்டி பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நிறுவனத்துடன் தொடர்புடைய அமெரிக்க அமைப்புகளுடன் எங்கள் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான திட்டமிடல், வரிசைப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கு உதவும் என கூறியுள்ளது. இந்த 4 மாகாணங்கள் மூலம் கிடைக்கிற அனுபவத்தை கொண்டு அமெரிக்கா முழுவதும் இந்த கற்றல் திட்டம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Pfizer ,states ,United States , Pfizer plans to distribute the corona vaccine in 4 states in the United States
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்