×

நமது பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டியது அவசியம்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேச்சு

டெல்லி :பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் புதுமையான கல்வி திட்டமான லீலாவதி விருதுகள்-2020-ஐ காணொலி மூலம் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அவர்,  நமது பெண் குழந்தைகளை தற்சார்பானவர்களாக, தன்னம்பிக்கை கொண்டவர்களாக, வெற்றிகரமானவர்களாக ஆக்க, தரமான கல்வியை அவர்களுக்கு அளிக்க வேண்டியது அவசியம் என்றார்.

இந்த விருதின் மையக்கருவான பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது இந்த அரசின் முக்கிய முன்னுரிமை என்று கூறிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கிழ் பெண் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக எண்ணற்ற நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

செல்வ மகள் திட்டம், பெண் குழந்தைகளைக் காப்போம், அவர்களுக்கு கல்வி அளிப்போம், சிபிஎஸ்ஈ உடான் திட்டம் உள்ளிட்ட பெண் குழந்தைகளுக்கானத் திட்டங்களை திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் பட்டியலிட்டார்சுகாதாரம், தூய்மை, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வியறிவு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம், கடன் வசதிகள், சந்தைப்படுத்துதல், புதுமைகள், திறன் வளர்த்தல், இயற்கை வளங்கள் மற்றும் பெண்களின் உரிமை ஆகியவற்றைக் குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு உருவாக்குவதே இன்று தொடங்கப்பட்ட விருதின் நோக்கங்களாகும்.

Tags : Ramesh Pokri ,girls , Speech by Ramesh Pokri, Union Minister for Girl Child Education
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்