×

ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பட்டியலில் 54வது இடத்திற்கு பின்தங்கிய சென்னை : ஈரோடு, கோவை உள்ளிட்ட நகரங்களை விட தலைநகரம் மோசமாக இருப்பது அம்பலம்!!

டெல்லி : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள 100 நகரங்களில் நடத்தப்பட்ட வாராந்திர மதிப்பாய்வில் சென்னை 54வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள ஒரு நகரத்தை டெண்டர் வெளியிடுவது, பணி ஒழுங்குமுறை, வேலை முடிக்கப்பட்ட பணிகள், திட்டத்திற்கு மாநில அரசின் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் வாரம் தோறும் மத்திய நகர்ப்புற விவகார அமைச்சகம் கணக்கிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் ஒன்றான சென்னை 54வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. திட்டத்தை செயல்படுத்தும் முறைக்கு தரப்படும் 60 புள்ளிகளில் 21.47 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

நிதி ஒதுக்கீடு,நிதி செலவீனம் உள்ளிட்ட பகுதிகளிலும் போதிய ஆர்வம் இல்லாதது மத்திய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான வாராந்திர மதிப்பாய்வில் 100 புள்ளிகளுக்கு சென்னை 45.23 புள்ளிகளை மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 54வது இடத்தில் பின் தங்கி உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சேலம் 8வது இடத்திலும் திருப்பூர்  4வது இடத்திலும் வேலூர் 32வது இடத்திலும் இருக்கின்றன.

மதுரை 42ம் இடத்தில் உள்ளது. கோவையும் நெல்லையும் முறையே 45,50வது இடத்தை பிடித்திருக்கின்றன. இருப்பினும் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் சென்னை மாநகரத்திற்கு இடம் என்ன என்ற துல்லியமான தகவல் மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை மூலமே தெரியவரும் என்கிறார்கள் சென்னை மாநகராட்சி மற்றும் மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Chennai ,Smart City ,Coimbatore ,cities ,Erode , Smart City, Cities, List, Chennai, Erode, Coimbatore
× RELATED அண்ணாமலை போட்டியிடும் கோவைக்கு மட்டும் ஐபிஎஸ் இல்லாத எஸ்பியை நியமிப்பதா?