சபரிமலையில் இரவு 10 மணிக்கு பதிலாக 9.30-க்கே நடை அடைக்கப்படும்: தேவசம் போர்டு

கேரளா: சபரிமலையில் இரவு 10 மணிக்கு பதிலாக 9.30-க்கே நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இரவு நேரத்தில் நீண்ட நேரம் நடை திறக்க வேண்டாம் என்று தந்திரியுடன் கலந்து ஆலோசித்ததில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு பதிலாக 8 மணிக்கே அத்தாழ பூஜை நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு அறிவராசனம் பாடி, 9.30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. பக்தர்கள் இரவு7 மணிக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதி கிடையாது.

Related Stories:

>