×

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடைபெற உள்ளது. முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொடர்ந்து சிறப்பு பிரிவு மற்றும் பொதுக் கலந்தாய்வுகள் நடைபெறும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தகவல் அளித்துள்ளது. அரசு பள்ளி மாணவருக்கான 7.5% இடஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ளனர்.


Tags : MBBS ,BDS Consultation ,Chennai , MBBS, BDS Consultation for courses starts today in Chennai
× RELATED நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசுப்...