‘ஆண்மகன்’ என்று அறிவிக்க கலெக்டரிடம் வாலிபர் மனு

நாகர்கோவில்: தன்னை ஆண்மகன் என்று அறிவிக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரி மாவட்டம் கல்குளம் தாலுகா மருந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் சிங். எம்.சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த 2013ல் திருவனந்தபுரத்தில்  தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

அப்போது அவருடன் பணியாற்றியவர்கள் அவரை திருநங்கை என்று கேலி செய்துள்ளனர். இந்தநிலையில் ஸ்டாலின் சிங்கிற்கு திருமணமாகி ஒரு  பெண் குழந்தையும் உள்ளது.

அவர் தற்போது எங்கு வேலைக்கு சென்றாலும் அவரை திருநங்கை என்று கூறி கேலி செய்து வருவதாகவும், எனவே மிகுந்த மன உளைச்சல்  உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு தன்னை ஆண் மகன் என்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கேட்டு கலெக்டரிடம்  மனு அளித்துள்ளார். வினோதமான கோரிக்கையுடன் மனு கொடுக்க வந்தவரால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>