ஓட்டலில் வெங்காய வெடியை வீசியதில் 2 பேர் காயம்

தஞ்சை: தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் முத்துக்குமார். கரந்தை மாநகராட்சி பள்ளி அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு  11மணியளவில் அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரில் ஒருவர், திடீரென வெங்காய வெடியை ஓட்டலில் வீசினார். அது ஓட்டலில் விழுந்து பயங்கர  சத்தத்துடன் வெடித்ததில், கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கியது. அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் ராமாபுரத்தை  சேர்ந்த வெங்கடேஸ்வரன்(25) பலத்த காயமடைந்தார். ஓட்டல் உரிமையாளர் முத்துக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Related Stories:

>