×

வணிகவரித்துறையில் 2020-21ம் நிதியாண்டில் 14,435 கோடி வருவாய் இலக்கு: அமைச்சர் வீரமணி அறிவிப்பு

சென்னை: வணிகவரித்துறையில் 2020-21ம் நிதியாண்டில் 14,435 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரமணி கூறினார்.வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் பதிவுத்துறையின் அக்டோபர் 2020 மாதாந்திர பணி சீராய்வு கூட்டம் நேற்று சென்னையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பீலா ராஜேஷ், பதிவுத்துறை தலைவர் சங்கர், மற்றும் அதிகாரிகள்  பங்கேற்றனர்.  

இந்த கூட்டத்தில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியதாவது:2020-21 நிதியாண்டிற்கு அடைய வேண்டிய வருவாய் 14435.25 கோடி என இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை முழுமையாக அடைவதற்கான முயற்சியில் முழு கவனம் செலுத்த வேண்டும். வருவாய் இலக்கினை  அடைவதற்காக நிலுவை ஆவணங்கள் சரியாக இருப்பின் உடன் விடுவித்தல், தணிக்கை இழப்புகளை வசூலித்தல், சரியான ஆவணங்களை  தாமதமின்றி பதிவு செய்தல் முதலான யுக்திகளை கையாண்டு வருவாய் இலக்கினை அடைந்திட வேண்டும் என்றார்.



Tags : Veeramani , 14,435 crore in the commercial sector in the financial year 2020-21 Revenue Target: Announcement by Minister Veeramani
× RELATED திமுக, காங்., தேர்தல் அறிக்கைகள் தான் இந்தியாவுக்கே கலங்கரை விளக்கம்