×

சென்னையில் வரும் 21ம் தேதி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் வரும் 21ம் தேதி பல்வேறு புதிய திட்டங்களுக்கு காணொளி காட்சி வாயிலாக மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்ட உள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை, கலைவாணர் அரங்கில் 21ம் தேதி மாலை 4.30 மணியளவில் பல்வேறு உட்கட்ட மைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா  நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தலைமையேற்பார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் 380 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை  மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தும், 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி  சாலையில் ரூபாய் 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம்,  நஞ்சை புகலூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் காவேரி  ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், இந்தியன் ஆயில்  கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், ஆமுல்லைவாயலில் ரூபாய் 1,400  கோடி மதிப்பீட்டில் லூப் பிளாண்ட்  அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும்  திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார். இவ்விழாவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றுவார்.  தொழில் துறை  அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலை வகிப்பார்.

கரகாட்டம், ஒயிலாட்டத்திற்கு அனுமதி வேண்டும் பாஜ மனு
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாஜ மாநில செயலாளர் கரு.நாகராஜன் நேற்று அளித்த மனுவில்  கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் வருகையையொட்டி விமானநிலைய நுழைவாயில் 5 முதல் அமித்ஷா தங்கும் இடம்வரை உள்ள  சாலைகளின் இருபுறங்களிலும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தனிமனித இடைவெளிவிட்டு முகக்கவசத்துடன் கரகாட்டம், ஒயிலாட்டம்,  மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



Tags : Amit Shah ,Chennai , Coming to Chennai on the 21st For new projects Amit Shah lays the foundation
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...