சுருட்டபள்ளி அணை தடுப்பு உடைந்தது

* 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆரணியாற்றில் நீர்வரத்து * விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் பெய்த கனமழையால் சுருட்டபள்ளி அணையின் தடுப்பு உடைந்தது. அதேபோல், ஆரணியாற்றில் 5  ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர் வரத்து அதிகாரித்து காணப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக  மழை பெய்து வருகிறது. மேலும், ஆந்திர பகுதியில் கடந்த சில  நாட்களாக மழை பெய்து வருவதால், ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம்  நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழைநீர் சின்னாப்பட்டு,  காரணி வழியாக சுருட்டபள்ளி அணைக்கு வந்து கொண்டிருந்தது. இதனை, அங்குள்ள அணையில் தேக்கி வைக்கப்பட்டது.இதைதொடர்ந்து, அணையில் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் கடந்த 29ம் தேதி ஊத்துக்கோட்டையில் 914 ஏக்கர் கொண்ட பெரிய ஏரியான ஈசா  ஏரிக்கு  வினாடிக்கு 237 கனஅடி வீதம் தமிழக -  ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  இந்த  தண்ணீர் ஊத்துக்கோட்டை ஏரி நிரம்பியதும், அங்கிருந்து 14 ஏரிகளுக்கு திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையால், நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வந்த தண்ணீர் சுருட்டபள்ளி ஆரணியாற்றின்  குறுக்கே உள்ள   அணையின் தடுப்பை நேற்று உடைத்தது. இதையொட்டி, ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் தண்ணீர் வரத்து அதிகம் காணப்படுகிறது. மேலும்,  மழை தொடர்ந்து பெய்து ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால் இன்று காலை 9 மணியளவில்  தண்ணீர் திறக்கப்படுகிறது.மேலும், 5 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஆற்றில் தண்ணீர் வருவதால், நீர்நிலைகள் உயர்ந்துள்ளன. இதையொட்டி, அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், நேற்று மழை இல்லாததால் பிச்சாட்டூர் ஏரி  இன்று (18-ந் தேதி) திறக்கப்படும்’ என்றனர்.

Related Stories:

>