அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் நியமனம்

சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாநில அமைப்பு செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளுக்கான நிர்வாகிகளை நியமனம் செய்து  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்  அறிவித்தனர்.  இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக வக்கீல் சி.திருமாறன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே சென்னை தெற்கு  (கிழக்கு) மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக பதவி வகித்தவர்.

ராமநாதபுரம் மாவட்டத்ைத சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.  தற்போது சிறப்பு அரசு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். நெடுஞ்சாலை துறை தொடர்பான வழக்குகளிலும், சிவில் மற்றும் ரிட் வழக்குகளிலும்  மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்.

Related Stories:

>