×

ஹம்பியில் 215மீ உயரம் கொண்ட அனுமன் சிலை

பல்லாரி: கர்நாடகாவில், பல்லாரி மாவட்டம் ஹம்பியில்,  ரூ.1,200 கோடி செலவில் 215 மீட்டர் உயரம்  கொண்ட அனுமன் சிலை அமைக்கப்படுகிறது. அனுமன் ஜன்மபூமி  தீர்த்த க்‌ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் கோவிந்த ஆனந்த சரஸ்வதி  அளித்த பேட்டியில், ‘‘ அயோத்தில் 221மீ உயரத்தில்  ராமர் சிலை  அமைக்கப்படுகிறது.  ராமனின் நித்திய பக்தர் என்பதால், அனுமனுக்கு 215 மீட்டர் உயர சிலை அமைக்கப்படும்.  எங்கள் அறக்கட்டளை  சார்பில் அயோத்தி  ராமர் கோயிலுக்கு 80 அடி உயர ரதம் வழங்கப்படும்,’’ என்றார்.



Tags : Hanuman ,Hampi , In Hampi With a height of 215 m Hanuman statue
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்...