ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தவன் நான்: புத்தகத்தில் ஒபாமா சுவாரசிய தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, சிறுவயதில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை கேட்டு வளர்ந்ததாக தனது  புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லாண்ட்’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில், தனது இளமைக்காலம் பற்றியும், தான்  சந்தித்த உலக தலைவர்கள் பற்றியும், இந்தியா பற்றியும் பல சுவாரஸ்ய தகவல்களை எழுதியுள்ளார். 768 பக்கங்கள் கொண்ட புத்தகமாக இரு  தொகுப்புகளாக உருவாக்கப்பட்டு முதல் பகுதி உலகம் முழுவதும் நேற்று வெளியானது.அதில், இந்தியா குறித்து ஒபாமாக  கூறியிருப்பதாவது:நவீன இந்தியா பல வெற்றிக்கதைகளால் ஆனது. அடுத்தடுத்து தொடர்ந்து மாறும் அரசுகள், அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கசப்பான  சச்சரவுகள், பல்வேறு ஆயுதம் தாங்கிய பிரிவினைவாத இயக்கங்கள், அனைத்து விதமான ஊழல்கள் என எல்லாவற்றையும் கடந்து வெற்றிநடை  போடுகிறது. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வாழும் இந்தியாவில், 2 ஆயிரத்துக்கும் மேலான பழங்குடி இனக்குழுக்கள், 700க்கும்  மேற்பட்ட மொழிகள் உள்ளன.

நான் 2010ம் ஆண்டு அதிபராக இந்தியாவுக்கு முதல் முறையாக பயணித்தேன். அதற்கு முன் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால், எப்போதும் என்  மனதில் இந்தியாவைப் பற்றி சிறப்பான எண்ணம் இருந்தது.  என்னுடைய சிறுவயதில் நான் இந்தோனேசியாவில் வளர்ந்தேன். அப்போது இந்துக்களின்  இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதக் கதைகளை கேட்டு வளர்ந்தேன். எனக்கு கிழக்கு நாடுகளின் மதங்கள் மிகவும் பிடிக்கும். என்னுடன்  இந்தியாவைச் சேர்ந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்தார்கள், நண்பர்கள் இருந்தார்கள். அவர்கள்தான் எனக்கு பருப்பு, கீமா சமையல்  செய்வதைப் பற்றி கற்றுக் கொடுத்தார்கள். பாலிவுட் சினிமாக்களை பார்க்கவும் பழக்கப்படுத்தினார்கள். இவ்வாறு கூறி உள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஒபாமா பெரிதும் புகழ்ந்து பாராட்டி உள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி  பற்றியும் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் புத்தகங்களை நிறைய படித்திருப்பதாக கூறியிருக்கும் ஒபாமா, அவரது எழுத்துக்கள் தனது ஆழமான  உள்ளுணர்வுக்கு குரல் கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அல்-கொய்தாவுடன்பாக். ராணுவம் தொடர்புகடந்த 2011ல் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ரகசிய இடத்தில் மறைந்திருந்த அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஒசாமா பின்லேடனை அமெரிக்க  ராணுவம் அதிரடி தாக்குதல் மூலம் கொன்று பழி தீர்த்தது.

இந்த சம்பவம் குறித்து ஒபாமா தனது புத்தகத்தில், ‘‘ஒசாமா மீதான தாக்குதலில்  பாகிஸ்தானின் பங்கு எதுவுமில்லை. அவர்களுக்கு எதுவும் தெரியாமல் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது. காரணம், பாகிஸ்தான் ராணுவத்திற்குள்  குறிப்பாக அதன் உளவு அமைப்புகளில் சிலர் தலிபான், அல்கொய்தாவுடன் தொடர்பு கொண்டிருந்தனர். அதனால், ரகசியம் கசிந்துவிடும் என்பதால்  பாகிஸ்தானுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை’’ என கூறி உள்ளார்.

Related Stories:

>