வெஸ்ட் இண்டீசுடன் டி20 தொடர் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், போல்ட்டுக்கு ஓய்வு

ஆக்லாந்து: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப் பந்துவீச்சாளர்  டிரென்ட் போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதுகிறது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி  நேற்று அறிவிக்கப்பட்டது. டி20 அணியில் கேப்டன் வில்லியம்சன், போல்ட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டிம் சவுத்தீ கேப்டன் பொறுப்பேற்கிறார்.  புதுமுக வீரர்கள் டிவோன் கான்வே, கைல் ஜேமிசன் இடம் பெற்றுள்ளனர்.

டி 20 போட்டிகள் நவ. 27, 29, 30 தேதிகளில் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் ஹாமில்டனில் டிச. 3ம் தேதியும், 2வது டெஸ்ட் வெலிங்டனில் டிச.  11ம் தேதியும் தொடங்குகிறது. டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டெல், டிரென்ட் போல்ட், கோலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன்,  டாம் லாதம்,  ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், வாட்லிங் (விக்கெட் கீப்பர்), வில் யங்.டி20 அணி: டிம் சவுத்தீ (கேப்டன்), ஹமிஷ் பென்னட், டிவோன் கான்வே, லோக்கி பெர்குசன், மார்டின் கப்தில், கைல் ஜேமிசன், டாரில் மிட்செல்,  ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, கிளென் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட் (விக்கெட் கீப்பர்), ராஸ் டெய்லர்.

Related Stories:

>