×

அலெக்சாண்டரை வீழ்த்தினார் மெட்வதேவ்

லண்டன்: ஏடிபி டூர் பைனல்ஸ் தொடரின் லீக் ஆட்டத்தில், ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் முதல் வெற்றியை பதிவு செய்தார். டோக்கியோ 1970 பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் மோதிய மெட்வதேவ் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை  வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 29 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நம்பர் 1 வீரர் நோவாக்  ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் டீகோ ஷ்வார்ட்ஸ்மேனை (அர்ஜென்டினா) எளிதில் வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 18  நிமிடத்துக்கு நீடித்தது.



Tags : Medvedev ,Alexander , Medvedev defeated Alexander
× RELATED ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: ஒருவர் கைது