பாகிஸ்தான் பயணம் ரத்து

இங்கிலாந்து கிரிக்கெட் அணி  ஜனவரி மாதம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு இரு அணிகளுக்கு இடையே  டி20, ஒருநாள் போட்டிகள் நடைபெற இருந்தன. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்  அறிவித்துள்ளது.வீரர்களின் உடல்நலன், செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

காரணம் இங்கிலாந்து வீரர்களில்  பலர்  பிக் பாஷ் டி20 லீக் தொடரில்  பங்கேற்க உள்ளனர். கூடவே ஜனவரியில்  இந்தியா, இலங்கையில் நீண்ட தொடருக்கும்  திட்டமிடப்பட்டுள்ளது.  எனவே பாகிஸ்தான் சுற்றுப்பயணம்  அடுத்த ஆண்டு செப்டம்பர், அக்டோபருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து 15 ஆண்டுகளுக்கு முன்பு  2005ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றது. பாகிஸ்தான் அணி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் இங்கிலாந்து  சென்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>