×

அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தில் தர்மபுரி, திண்டுக்கல், ராமநாதபுரம், நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வந்த போதிலும் தற்போது திறக்க வாய்ப்பில்லை என அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் தெரிவித்துள்ளார். அடையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு துவங்கிய மழை இரவு வரை நீடித்தது. மேலும் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் அருவிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆற்று அணை தனது முழு கொள்ளளவான 57 அடிக்கு தற்போது வரையில் 53 அடியை நெருங்கி வருகிறது. இதனையடுத்து ஆற்றின் கரை யோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : districts , Chance of moderate rain in 7 districts for the next 3 hours; Chennai Meteorological Center Information
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை