×

சொத்துக்களை பணமாக்குவது எப்படி? : உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

டெல்லி : முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது குறித்த ஆலோசனை சேவைகளை பெற உலக வங்கியுடன், மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை(டிபாம்)  இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.பங்கு விற்பனை அல்லது மூடல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியமற்ற சொத்துக்கள் மற்றும் ரூ.100 கோடிக்கு மேற்பட்ட எதிரிகளின் சொத்து ஆகியவற்றை   முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை பணமாக்குகிறது.

முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதற்கு  முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை திட்டம் வைத்துள்ளது.  தற்போது இத்துறை, முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது தொடர்பான ஆலோசனைகளை பெற உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆலோசனை திட்டம், இந்தியாவில் பொது சொத்து பணமாக்குதலை பகுப்பாய்வு செய்கிறது. சர்வதேச மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு எதிராக அதன் நிறுவன மற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடு செய்வதோடு, செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்கும் துணைபுரிகிறது.

இந்த திட்டம் முக்கியமற்ற  சொத்துக்களை, பணமாக்கும்  செயல்முறையை எளிதாக்கும் மற்றும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்  பயன்படுத்தப்படாத / ஓரளவு பயன்படுத்தப்பட்ட  சொத்துக்கள் மூலம்   முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை கணிசமாக அதிகரிக்க உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : World Bank , World Bank, Federal Government, Agreement
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி