புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் மருத்துவக் கலந்தாய்வு தாமதமாகிறது : முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு சட்டம் இயற்றியதை தொடர்ந்து, புதுச்சேரியில் 10% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டெல்லியில் நிதியமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் தராததால் மருத்துவ கலந்தாய்வு தாமதமாகிறது என தெரிவித்துள்ளார். 10% ஒதுக்கீட்டுக்கு உடனே ஒப்புதல் தரப்படும் என மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்தன், பொக்ரியால் உறுதியளித்ததாகவும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.798 கோடி வழங்க நிதியமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related Stories:

>