15 நாள் பயணமாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை தமிழகம் வருகை

மீனம்பாக்கம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 15 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 5.05 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில், தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டில் இருந்து சென்னை வருகிறார். பழைய விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சேஷாத்திரி அவீன்யூவிற்கு சென்று தங்குகிறார்.

24ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் குஜராத் மாநிலம் வதோரா செல்கிறார். மீண்டும் 25ம் தேதி பகல் ஒரு மணிக்கு தனி விமானத்தில் வதோராவிலிருந்து சென்னை வருகிறார். டிசம்பர் 2ம் தேதி காலை 8.55 மணிக்கு தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலையம் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>