×

கொலம்பியாவில் 260 கி.மீ. வேகத்தில் தாக்கிய 'அயோட்டா'புயல்!: மரங்கள் வேரோடு சாய்ந்தன; ராட்சத அலையால் மக்கள் பீதி..!!

வாஷிங்டன்: வெப்பமண்டல புயலான அயோட்டா மத்திய அமெரிக்க நாடுகளை தொடர்ந்து கொலம்பியாவிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ், எல்சார்படோர், கவுதமாலா, நிகரகுவா, எப்ராவிடென்சியா ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளை தொடர்ந்து அயோட்டா என்கின்ற சக்தி வாய்ந்த புயல், தற்போது தென் அமெரிக்க நாடுகளையும் கடுமையாக தாக்கி வருகிறது. கடற்கரையை ஒட்டிய கொலம்பியாவில் சான் ஆண்டரஸ் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. 260 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால், கடலில் பல அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் பலரையும் பீதியடைய செய்தது. ஹோண்டுராஸின் வடக்கு பகுதியில் உள்ள பல நகரங்கள் நிலச்சரிவை சந்தித்தன. 300க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 20க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உணவு, குடிநீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஹெலிகாப்டர் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புயலை அளக்கும் அளவுகோளின்படி அயோட்டா புயல் தற்போது 5ம் வகை சூறாவளியாக உருப்பெற்றுள்ளது. இதனால் சேதம் பலத்த அளவில் இருக்கும் என்று அமெரிக்க தேசிய புயல் மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, நிகரகுவாவில் கிழக்கு- தென்கிழக்கில் சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் இந்த சூறாவளி நிலைக்கொண்டுள்ளது. நிகரகுவாவில் சுமார் 80,000 பேர் அயோட்டா புயலால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக உணவு திட்டம் எச்சரித்துள்ளதால், அவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

Tags : Colombia ,storm ,Iota , Colombia, 'Iota' storm, trees, giant wave, people panic
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...