ஏடிபி பைனல்ஸ் தொடர்: ஜோகோவிச், மெட்வெடேவ் வெற்றி

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தலா 4 வீரர்கள் என இரு குரூப்பாக பிரிக்கப்பட்டு போட்டி நடக்கிறது. இதில் நேற்று இரவு டோக்கியோ 1970 பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்-ஜெர்மனியின் ஸ்வாட்ஸ்மேன் மோதினர்.

இதில், ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இதே பிரிவில் இன்று அதிகாலை நடந்த போட்டியில், ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ்-ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில், டேனியல் மெட்வெடேவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இன்று இரவு 7.30 மணிக்கு லண்டன் 2020 பிரிவில் உள்ள சுவிட்சர்லாந்தின் நடால்-டொமினிக் தீம்(ஆஸ்திரியா) மோதுகின்றனர்.

Related Stories:

>