டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவால் மீண்டும் லாக்டவுன் அறிவிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரினார் அரவிந்த் கேஜ்ரிவால்

* டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை

* திருமணங்கள், கூட்டங்கள், விசேஷங்களில் 50 பேருக்கு மட்டும் அனுமதி

*  தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைப் பின்பற்றுங்கள் என முதல்வர் வேண்டுக்கோள்

டெல்லி: டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸால், ஹாட்ஸ்பாட் பகுதிகள் மற்றும் காய்கறிச் சந்தைப் பகுதிகளில் மீண்டும் சில நாட்களுக்கு ஊரடங்கைக் கொண்டுவர மத்திய அரசிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அனுமதி கோரியுள்ளார். டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் 3-வது அலை வீசுகிறது. டெல்லியில் மட்டும் தற்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7,713 பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதை அறிந்து உடனடியாக 750க்கும் மேற்பட்ட ஐசியு படுக்கைகளை அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என டெல்லி  முதல்வர் பேட்டியளித்தார். டெல்லி அரசின் அனைத்து அமைப்புகளும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரு மடங்கு உழைத்து வருகின்றன என கூறினார். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள், சமூக விலகலைப் பின்பற்றுங்கள் என்பது மட்டும் தான் நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இதனால் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகள், சந்தைப் பகுதிகளில் மட்டும் தேவைப்பட்டால் லாக்டவுனைக் கொண்டு வருவதற்கான அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறினார். டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தவுடன் திருமணங்கள், கூட்டங்கள், விசேஷங்கள் ஆகியவற்றில் மக்கள் பங்கேற்கும் அளவை 200 பேருக்கு மேல் அதிகரித்தோம். ஆனால் இப்போது அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுவிட்டோம். 50 நபர்களுக்கு மேல் திருமணம், விஷேசம், கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதியில்லை எனவும், இந்த முடிவு தற்போது துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Related Stories:

>