நடிகர் சூரியிடம் நில மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஊராட்சி மன்றத் தலைவரிடம் விசாரணை

சென்னை: நடிகர் சூரியிடம் நில மோசடி செய்ததாக  தொடரப்பட்ட வழக்கில் சிறுசேரி கிராம ஊராட்சி மன்றத் தலைவரிடம் போலீசார் விசாரணை. சிறுசேரில் நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி ரமேஷ் குடவாலா, படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடையாறு குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் சூரி 2 முறை ஆஜராகி தான் ஏமாற்றப்பட்டது குறித்த வாக்குமூலத்தையும், ஆவணங்களையும், பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்களையும் ஏற்கனவே காவல்துறையினரிடம் சமர்பித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அடையாறு குற்றப்பிரிவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த புகார் தொடர்பாக சிறுசேரி ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பரம் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேசன் ஆகிய இருவரிடமும் தனித்தனியாக அடையாறு குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த நிலம் வீட்டுமனை நிலைமா, அல்லது விவசாய நிலைமா என்பது தொடர்பான சான்றிதழை அந்த ஊராட்சி மன்ற தலைவர் நிலத்தை விற்கும் பொது சூரியிடம் கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே அந்த ஆவணங்களை ஏற்கனவே காவல்துறையினர் கைப்பற்றி ஆய்வு செய்திருக்கிறார்கள்.

அந்த ஆவணங்கள் தொடர்பான விசாரணை தற்போது ஏகாம்பரத்திடம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக அவரது சகோதரர் வெங்கடேசனிடமும் விசாரணை நடைபெற்றிருக்கிறது. இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ரமேஷ் குடவாலா முன் ஜாமின் கோரி உயர்நீதி மன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த மனுவை முன்னாள் டி.ஜி.பி திரும்ப பெற்றுவிட்டார். வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: