×

ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்று தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிப்பு!!

சென்னை : வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் தொழில் புரிவதற்கான தேர்வு குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. FMGE தேர்வு வினாத்தாளை மதிப்பீடு செய்ய சுதந்திரமான நிபுணர் குழு அமைக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மருத்துவ பட்டம் பெற்று தேர்வில் தோல்வியடைந்த 17 பேர் மனு நிராகரிக்கப்பட்டது.இந்தி மொழியில் லோகோக்களுடன் வினாக்கள் இடம் பெற்றதாக 17 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணையின் போது நிபுணர் குழுவால் வினாத்தாள் ஆய்வு செய்யப்பட்டதாக மருத்துவ ஆணையம், தேசிய தேர்வுகள் வாரியம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து முழுமையாக தயார்படுத்திக்கொண்டு அடுத்த தேர்வை எதிர்கொள்ள மனுதாரர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.


Tags : persons ,examination ,China ,countries ,Russia , Russia, China, Country, Degree, Failure
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...