×

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது உறுதியான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் புகாரளிக்கலாம்: நீதிபதி கலையரசன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது ஆதாரத்துடன் புகாரளிக்கலாம் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்கள் குறித்து நீதிபதி கலையரசன் விசாரித்து வருகிறார். துணை வேந்தர் சூரப்பா முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசனை நியமித்து தமிழக அரசு கடந்த 13ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, கலையரசன் சென்னையில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வாவை சந்தித்து, தாம் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை பெற்றுக் கொண்டார். மேலும், சூரப்பா மீதான புகார்கள் தொடர்பான முழு விவரங்கள், அதற்கான ஆதாரங்களையும் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் யார் வேண்டுமானாலும் புகாரளிக்கலாம் என்று நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். சூரப்பா பதவியேற்றத்திலிருந்து நடந்த நிகழ்வுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும், சூரப்பா மூலம் பணி நியமனம் பெற்றவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்துள்ளார். தேவையப்பட்டால் சூரப்பா பதவி ஏற்பதற்கு முன் நடந்த நியமனங்கள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Kalaiyarasan ,Vander Surappa ,Anna University , Anna University, Vice Chancellor Vander Surappa, Complaint, Judge Kalaiyarasan
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...