×

செங்குணம் கிராமத்தில் உரக்கிடங்கு கொட்டகை மழைக்கு கவிழ்ந்து சேதம்

பெரம்பலூர்: செங்குணம் கிராமத்தில் மண்புழு உரக் கிடங்கு கொட்டகை. காற்று மழைக்கு கவிழ்ந்து சேதமானது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம், செங்குணம் ஊராட்சியில், கடந்த 2016-2017ம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்ட ஊரகவளர்ச்சி முக மையின் மூலம், அப்பகுதி அண்ணா நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வே லை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ90ஆயிரம் மதிப் பில் மண்புழு இயற்கை உரம் தயாரிக்க மண்புழு உரக்கிடங்கு கொட்டகை அமைத்துத் தரப்பட்டது. இந்தக் கொட்டகை தென் னங்கீற்று, மூங்கில் கொ ண்டு வேயப்பட்டிருந்தன.

இதன் உள்ளே மண் புழு இயற்கை உரம் தாயாரிப் பதற்காக நீண்டதொட்டி கட் டப்பட்டு, வைக்கோல், மண் நிரப்பப்பட்டு, பல்வேறு கட் டமைப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் ஏனோ இன்றுவரை இந்தக் கொட்டகையை பயன்படுத்தும் விதமாக சம்மந்தப்பட்ட துறைஅலுவலர்கள் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை, காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாத உரக்கிடங்கு கொட்டகை காற்று, வெயில், மழை உள்ளிட்டப் பல் வேறு காரணங்களால் சரிந்து விழுந்து விட்டன.பயன் படுத்தப்படாமலேயே சரிந்து விழுந்த மண்புழு உரக் கிடங்கு குறித்து, ஊராட்சி ஒன்றியம் நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவேண்டுமென செங்குணம் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Chengunam , Fertilizer shed in Chengunam village damaged by rain
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...