×

தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம்: இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா கண்டறியவில்லை

பெரம்பலூர்: தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி வரை 45 பேர் வீட்டில் தனிமைப்படுத்தி இருந்தனர். தற்போது அவர்களும் கொரோனா நெகடீவ் காணப்பட்ட நிலையில் அவர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக அம்மாவட்ட சுகாதார நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 2,228 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்பபோது 2,207 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 21 பேர் ஏற்கனவே கொரோனா மற்றும் வேறு பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 200 வீடுகளில் தலா 2 படுக்கை வசதிகளுடன் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனவே மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கொரோனா தடுப்பு அதிகாரிகளின் ஆதரவோடு பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா முற்றிலும் அளிக்கப்பட்ட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Perambalur district ,Tamil Nadu ,no one , In Tamil Nadu, Corona, Absent, District, Perambalur
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி