×

திருமணத்திற்கான மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் : மத்தியப் பிரதேச அரசு அறிவிப்பு!!

போபால் :  குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்ணை வேறொரு மதத்தை சேர்ந்த நபர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்த பிறகு அந்த பெண்ணை கட்டாயம் மதமாற்றம் செய்வது லவ் ஜிஹாத் என்று சொல்லப்படுகிறது. சமீபகாலமாக லவ் ஜிஹாத் விவகாரம் பெரிதாக வெடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் மத்தியப் பிரதேசத்தில்  லவ் ஜிஹாத் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Madhya Pradesh ,government , Marriage, Religion, Law, Enacted, Madhya Pradesh, Government, Notice
× RELATED வந்தே பாரத் லாபம் எவ்வளவு தெரியுமா?.. ஆர்டிஐ மனுதாரர் அதிருப்தி