×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டுபிடிப்பு : பேரிடர் மேலாண்மைத்துறை

சென்னை : பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் என்று பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அவசரகால வெள்ளத்தடுப்பு உதவி எண்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்ட அமைச்சர் உதயக்குமார்,  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்கும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

Tags : locations ,Tamil Nadu ,Northeast ,Disaster Management Department , Northeast, Monsoon, Minister RP Udayakumar, Interview
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு