×

கேரளாவில் பரபரப்பு கொரோனா பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: மருத்துவமனை ஊழியர் மீது புகார்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. ேகரள மாநிலம் பத்தனம்திட்டாவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதித்த இளம் பெண்ணை ஆம்புலன்சில் வைத்து டிரைவர்  பலாத்காரம் செய்தார். இதையடுத்து டிரைவர் நவுசாத் கைதானார். இதேபோல் திருவனந்தபுரம் அருகே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தருவதாக  கூறி, இளம் பெண்ணை வீட்டுக்கு அழைத்து, கட்டிப்போட்டு பலாத்காரம் செய்த சுகாதார ஆய்வாளரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்,  கேரளாவில் மீண்டும் ஒரு கொரோனா நோயாளியை மருத்துவமனை ஊழியர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் உள்யேரி பகுதியில் மலபார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்  கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 12ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இளம் பெண்ணின் பெற்றோருக்கும் கொரோனா  ஏற்பட்டு அவர்களும் இதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தந்தை முதலாவது மாடியிலும், இளம் பெண்ணும், அவரது தாயும் 3வது மாடியிலும்  அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தந்தை இதய நோயாளி என்பதால் அவர் அனுமதிக்கப்பட்ட வார்டிலேயே தனது தாயையும் அட்மிட் செய்ய வேண்டும்  என்று இளம்பெண் மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.இதுதொடர்பாக விண்ணப்பம் கொடுக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர். ேமலும் ஒரு ஊழியர் விண்ணப்பம் எழுத உதவி செய்துள்ளார். அதன்பின்  இளம்பெண் தனது வார்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச தகவல்கள் வந்துள்ளன. உதவி செய்ததற்கு  நன்றிகூட கிடையாதா? என்ற மற்றொரு தகவலும் வந்தது. இதனால் அது தனக்கு உதவி செய்த மருத்துவமனை ஊழியர்தான் என்பதை  கண்டுபிடித்தார்.

இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கவச உடை அணிந்து  வந்த ஒரு ஊழியர், டாக்டர் அழைப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். உடனே ஊழியருடன் சென்றுள்ளார். 4வது மாடிக்கு அழைத்து சென்ற ஊழியர்  ஆட்கள் இல்லாத இடத்தில் வைத்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், ஊழியர் பிடியில் இருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் செய்தார்.  ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அந்தோளி போலீசுக்கு போன் மூலம் புகார் கூறியுள்ளார்.



Tags : hospital staff ,Kerala , Excitement in Kerala Attempt to rape Corona victim: Complaint against hospital staff
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...