×

பலாத்கார வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை: ஐகோர்ட்டில் அரசு வழக்கறிஞர் வாதம்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து  வருகிறது. பெண் நீதிபதி  தலைமையில் வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த  நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடப்பதால் விசாரணையை  நிறுத்தி  வைத்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றவேண்டும் என்று பாதிக்கப்பட்ட  நடிகை சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அரசு தரப்பு  சார்பிலும் இதே கோரிக்கை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம்  விசாரணையை 16ம் தேதி (நேற்று)  வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. நேற்று மீண்டும் இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.

அப்ேபாது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றம் துவக்கம்  முதல் இந்த வழக்கில் ஒருதலைபட்சமாக நடக்கிறது. பெண்  நீதிபதியாக  இருந்தபோதிலும் அவரால் பாதிக்கப்பட்ட நடிகையின் நிலையை புரிந்து கொள்ள  முடியவில்லை. வழக்கு விசாணையின் போது  நடிகையை அவமானப்படுத்தம் வகையில்  எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளை கேட்டனர். அதை தடுக்க நீதிபதி  முயற்சிக்கவில்லை. அரசு  தரப்பு, அதை சுட்டிகாட்டியபோதும்  அவர் ஏற்க மறுத்தார்.

நீதிமன்றத்தில் பலமுறை நடிகை கதறி அழும் சூழலும் ஏற்பட்டது.  இதனால் விசாரணை  மீதான நம்பிக்கை போய்விட்டது. எனவே விசாரணை நீதிமன்றத்தை  மாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து விசாரணையை 20ம்  தேதிவரை ஒத்தி வைக்க  உத்தரவிட்டுள்ளது. அன்று தீர்ப்பு அளிக்கப்படும்  என்று நீதிபதி தெரிவித்தார்.



Tags : Actress ,rape trial court ,prosecutor , Rape case investigation In court Actress crying: Public prosecutor's argument in iCourt
× RELATED நடிகை குஷ்புவை கண்டித்து 3-வது நாளாக பெண்கள் போராட்டம்..!!