‘எனக்கே வெற்றி’ டிரம்ப் மீண்டும் வம்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடென் வென்றதை ஏற்றுக் கொள்ளாத அதிபர் டெனால்ட் டிரம்ப் தொடர்ந்து முரண்டு பிடித்து  வருகிறார். டிவிட்டரில் தினம் தினம் தனது கோபத்தை கொட்டி வருகிறார். நேற்று முன்தினம் முதல் முறையாக அவர் தனது தோல்வியை ஒப்புக்  கொண்டார். ‘தேர்தலில் மோசடி செய்து பிடென் வென்று விட்டார்’ என வாய்தவறி கூறி விட்டார். இதனால், அரசு நிர்வாக மாற்ற நடவடிக்கைகள் இனி  சுமூகமாகி விடும் என செய்திகள் வைரலாகின.

ஆனால் அடுத்த நாளே இதை பொய்யாக்கி விட்டார் டிரம்ப். தற்போது, ஊடகங்கள் மீது பாய்ந்துள்ளார் டிரம்ப். ‘அரசியல் சாசனத்துக்கு விரோதமான  இந்த மோசடியான  தேர்தலில் பிடென் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. பொய் செய்திகளை வழங்கும் ஊடகங்களை மட்டுமே  அவர் வென்றுள்ளார்’ என கொந்தளித்துள்ளார்.

அதோடு, ‘தேர்தலில் நான் வென்று விட்டேன்’ என டிவிட் போட்டு குழப்புகிறார். டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளும் சரியான தருணம்  இதுதான் என முன்னாள் அதிபர் ஒபாமாவும் அறிவுரை கூறி உள்ளார்.

Related Stories:

>