ஜெகன் மோகனுக்கு எதிரான வழக்கில் நீதிபதி திடீர் விலகல்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி என்.வி.ரமணா மீது குற்றச்சாட்டு தெரிவித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர்  ஜெகன்கோகன் ரெட்டி கடந்த மாதம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதில், நீதிபதி என்.வி.ரமணா தெலுங்கு தேசம் கட்சி தலைவரும்,  முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் யு.யு.லலித் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி யு.யு.லலித்,  ‘‘நான் வழக்கறிஞராக இருந்த போது ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளேன். அதனால்  இந்த வழக்கை அமர்வு விசாரிப்பது சரியாக இருக்காது’’ என தெரிவித்தார். வேறு ஒரு புதிய அமர்வை நியமனம் செய்யக்கோரி தலைமை நீதிபதியிடம்  பரிந்துரைதார். பின்னர், வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

>