வெற்றியுடன் தொடங்கினார் நடால்

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் தொடரின் லண்டன் 2020 பிரிவு லீக் ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) வெற்றியை வசப்படுத்தினார்.

ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவுடன் (8வது ரேங்க்) மோதிய நடால் (2வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 17  நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 7-6 (7-5), 4-6, 6-3 என்ற செட்  கணக்கில் சிட்சிபாசை (கிரீஸ்) வீழ்த்தினார்.

Related Stories: