×

புற்று நோயுடன் போராடும் நடிகர் தவசி

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக சிறிய கேரக்டரில் நடித்து வந்தவர் தவசி. மதுரை மாவட்டம் தாமரைபட்டியை சேர்ந்த இவர் கிழக்கு சீமையிலே  படத்தின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் தந்தையாக நடித்து  “கருப்பன் குசும்புக்காரன்” என்ற வசனத்தின் மூலம் மேலும் பிரபலமானார். தவசி தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெள்ளை தாடியும் முறுக்கு மீசையுமாய் கம்பீரமாக காட்சி அளித்த தவசி, இப்போது ஆளே உருமாறி சிகிச்சைக்கு கூட வழியில்லாமல் வறுமையில்  வாடிக் கொண்டிருக்கிறார். “30 வருடமாக சினிமாவில் நடிக்கிறேன். கடைசியில இப்படி ஒரு வியாதி வந்து என்னை முடக்கிப்போடும் என்று  எதிர்பார்க்கவில்லை.  சிகிச்சைக்குகூட பணம் இன்றி தவிக்கிறேன். என்னுடன் நடித்தவர்கள், என்னை ரசித்தவர்கள் எனக்கு உதவி செய்து என்னை  பழைய தவசியாக மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் தவசி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.



Tags : Thavasi , Actor Thavasi battling cancer
× RELATED ‘துளசி வாசம் மாறும்… தவசி புள்ள...