பட்டாக்கத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் கைது

புழல்:செங்குன்றம் அருகே 2 பேர் கையில் பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிவதாக நேற்று முன் தினம் செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கையில் பட்டாக்கத்தி முதலான பயங்கர  ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றிய 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

 அதில் அவர்கள் பாடியநல்லூர், ஜோதி நகரைச் சேர்ந்த பிரசாத் (22),  மற்றும் ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் (20) என்பதும், பிரசாத் மீது சோழவரம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு  நிலுவையில் இருப்பதும், விக்னேஸ்வரன் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரியவந்தது.  போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Related Stories:

>