காங். எம்பி மணீஸ் திவாரிக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மணீஸ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது  தொடர்பாக அவர் நேற்று தனது  டிவிட்டர் பதிவில், “எனக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்து  கொண்டேன். நோய் தொற்று உறுதியானது. இதுவரை வேறு எந்த அறிகுறியும் இல்லை. என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories:

>